சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் விபத்து - மேலாளர் கைது


சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் விபத்து - மேலாளர் கைது
x

சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவத்தில் அதன் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது. அந்த சமயத்தில், மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கி இருந்தவர்கள், பங்க் ஊழியர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த மதுராந்தகத்தை சேர்ந்த கந்தசாமி (வயது 63) என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இந்நிலையில் மேற்கூரை இடிந்து விழுந்த பெட்ரோல் பங்கின் மேலாளரான வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான பங்க் உரிமையாளர் அசோக்கை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story