விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பாய்மர படகு போட்டி


விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பாய்மர படகு போட்டி
x

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பாய்மர படகு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள தெற்கு புதுக்குடி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் முதல் பரிசு ரூ.40 ஆயிரம், 2-வது பரிசு ரூ.30 ஆயிரம், 3-வது பரிசு ரூ.20 ஆயிரம் என 3 பரிசுகளையும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடி படகுகள் தட்டி சென்றன. இதையடுத்து, வெற்றி பெற்ற படகு உரிமையாளர்களுக்கு சுழல் கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் மணமேல்குடி ஒன்றிய குழு தலைவர் பரணி கார்த்திகேயன், கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அக்பர் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தெற்கு புதுக்குடி கிராம மக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story