புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர் பவனி


புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர் பவனி
x

கோத்தகிரியில் புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர் பவனி இன்று நடக்கிறது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய தேர்த்திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அன்பியங்கள் சார்பில், பங்கு தந்தைகள் பங்கேற்ற திருப்பலி, மறையுரை நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பங்கு தந்தை ராஜநாயகம் தலைமையில் தமிழில் திருப்பலியும், 7 மணிக்கு பிஜு தண்ணி கொட்டில் தலைமையில் ஆங்கிலத்தில் திருப்பலியும், 9 மணிக்கு கூட்டுபாடல் திருப்பலியும் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு சோலூர்மட்டம் பங்கு தந்தை அலெக்ஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு கோத்தகிரி பங்கு தந்தை ஞானதாஸ் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னை ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது. பின்னர் நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவையொட்டி ஆரோக்கிய மாதா ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story