புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா
நிலக்கோட்டை அருேக புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடந்தது.
திண்டுக்கல்
நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சி மைக்கேல்பாளையத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நடந்தது. விழாவை முன்னிட்டு வத்தலக்குண்டு மறைவட்ட அதிபர் எட்வர்டு பிரான்சிஸ், மைக்கேல்பாளையம் பங்குத்தந்தை சேவியர்ராஜ் ஆகியோர் திருப்பலி நடத்தினர். பின்னர் 10 மின்ரத திருத்தேர்கள் ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் நேற்று திருப்பலியும், பகலில் தேர் பவனியும் நடைபெற்றது. பின்பு இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீருடன் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய நிர்வாக குழுவினர், அடைக்கல அன்னை அருட்சகோதரிகள் பங்கு அமைப்புகள் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story