புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி


புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி
x

புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருமயம் அருகே விராச்சிலை கிராமத்தில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. ஆலயத்தில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனை திருப்பலி நடைபெற்றது. நேற்று இரவு கூட்டுபாடல் திருப்பலி நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜ், தஞ்சை டோமி, ஆரோக்கிய பாஸ்கர், மரிய மைகேல் ஆகியோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இதனைத்தொடர்ந்து இரவு 9 மணி அளவில் புனித சூசையப்பர் தேர் பவனி நடைபெற்றது. இதில் சூசையப்பர், ஆரோக்கிய மாதா அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து விராச்சிலை கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. புனித சூசையப்பர் ஆலய திருவிழாவில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story