சக்திமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வீரகேரளம் திம்மையா நகரில் சக்திமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயம்புத்தூர்
வடவள்ளி
கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் திம்மையா நகரில் சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன், முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கடந்த 6-ந் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 7-ந் தேதி விமான கலசம் நிறுவுதல், 3-ம் கால வேள்வி பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, கலச திருக்குடங்கள் கோவிலை சுற்றி வலம் வருதல் ஆகியவை நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றன. இதையடுத்து சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கோபுர கலசத்திற்கு தீபாராதனை காண்பித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story