சத்தியமங்கலத்தில் குடிநீர் வினியோகிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்


சத்தியமங்கலத்தில் குடிநீர் வினியோகிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

சத்தியமங்கலத்தில் குடிநீர் வினியோகிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் குடிநீர் வினியோகிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட 10-வது வார்டில் உள்ளது புளியங்கோம்பை. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 10.30 மணி அளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வாரச்சந்தை அருகே உள்ள ரோட்டில் ஒன்று திரண்டனர்.

பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாைல மறியலில் ஈடுபட்டனர். சத்தி நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஜாமேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேந்தர், மாதர் சங்க தலைவி மல்லிகா வாசு, தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடிநீர் வழங்கக்கோரி...

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'புளியங்கோம்பை பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலமாக இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்ததால் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. மேலும் புளியங்கோம்பை பகுதியில் சாக்கடை வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதன் காரணமாக தான் சாலை மறியலில் ஈடுபட்டோம். உடனே நகராட்சி அதிகாரிகள் இங்கு வந்து எங்களுக்கு பதில் கூற வேண்டு்ம்' என்றனர். ஆனால் சுமார் 20 நிமிடம் ஆகியும் அங்கு நகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை.

நகராட்சி அலுவலகம் சென்றனர்

இதனால் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு நகராட்சி பொறியாளரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். அதற்கு அவர், 'விரைவில் உங்கள் பகுதியில் உடைந்து போன குடிநீர் குழாய் சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாலை மறியலால் வடக்குப்பேட்டை வாரச்சந்தை அருகே உள்ள ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story