தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை


தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை
x

தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் சக்திவேல் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் சிறப்பு கால முறை ஊதியமாக தூய்மை பணியாளர் களுக்கு ரூ. 5,200 அடிப்படை ஊதியமாக வைத்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும் 34 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மாத ஓய்வூதியமாக ரூ 2000-மும் ஒட்டு மொத்த பணப்பலனாக ரூ. 50,000 வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story