ரூ.70¾ லட்சத்துக்கு பருத்தி விற்பனை


ரூ.70¾ லட்சத்துக்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வார சந்தையில் ரூ.70¾ லட்சத்துக்கு பருத்தி விற்பனை ஆனது. கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

2,500 மூட்டை பருத்தி

கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற சந்தையில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் பகுதிகள் மற்றும் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 525 விவசாயிகள் 2,500 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ.8,213-க்கும், குறைந்த பட்சம் ரூ.6,499-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ.7,009-க்கும், குறைந்தபட்சம் ரூ.4,128-க்கும் ஏலம் போனது.

ரூ.70¾ லட்சத்துக்கு விற்பனை

மொத்தம் ரூ.70 லட்சத்து 87 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இந்த ஏலத்தில் திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தி முட்டைகளை வாங்கி சென்றனர். இத்தகவலை கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்தார்.

விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு எல்.ஆர்.ஏ. ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.700 வரையும், கொட்டு ரக பருத்தி ரூபாய் ஆயிரம் வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story