மின்னணு ஏலத்தில் பருத்தி விற்பனை


மின்னணு ஏலத்தில் பருத்தி விற்பனை
x

வேளாண் விற்பனைக்குழு மூலம் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதியில் மின்னணு ஏல முறையில் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம்

வேளாண் விற்பனைக்குழு மூலம் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதியில் மின்னணு ஏல முறையில் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மறைமுக ஏலம்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின்கீழ் இயங்கிவரும் ராமநாதபுரம் விற்பனைக்குழு மூலம் வாரந்தோறும் புதன்கிழமை கமுதி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும், வியாழக்கிழமைதோறும் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி கமுதி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் விவசாயிகளிடம் பருத்தி மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. கமுதி மற்றும் அதன் சுற்றியுள்ள வட்டாரத்தில் இருந்து விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

684 கிலோ பருத்தி விற்பனை

ஏலத்தில் அதிகபட்ச விலையாக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.6,700-ம் குறைந்தபட்ச விலையாக ரூ.6,300-ம் தரத்திற்கேற்றவாறு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் விவசாயிகள் தங்களது 684 கிலோ அளவுள்ள பருத்தி விளைபொருளை ரூ.45,526-க்கு விற்று பயனடைந்துள்ளனர். விவசாயிகள் தங்களது விளைபொருளை எவ்வித தரகு கமிஷன் இன்றி சரியான எடையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து பயன் அடைந்துள்ளனர்.

இந்த மறைமுக ஏலம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி தலைமையில், ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா முன்னிலையில் நடைபெற்றது. ராமநாதபுரம் விற்பனைக்குழுவின் மேலாளர் பழனிக்குமார், கமுதி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் நேசமணி, இளநிலை உதவியாளர் காளைலிங்கம், திட்ட சந்தை ஆய்வாளர்கள் சதீஸ்குமார், ராஜூ ஆகியோர் ஏலத்திற்கான பணிகளை செய்திருந்தனர்.


Related Tags :
Next Story