கஞ்சா, குட்கா விற்ற 13 பேர் கைது


கஞ்சா, குட்கா விற்ற 13 பேர் கைது
x

கஞ்சா, குட்கா விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நடத்திய சோதனையில் கஞ்சா விற்ற திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ்நகர் சூர்யா (வயது 25), பூச்சி என்கிற மூர்த்தி (23), காட்டுமன்னார்கோவில் ஜானகிராமன் (26), மணிமாறன் (22), நல்லூர் ராஜா (35) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 260 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் குட்கா விற்ற சிதம்பரம் திருமுருகன் (56), கருப்பசாமி (47), கொள்ளிடம் அன்புசெல்வம் (29), காட்டுமன்னார்கோவில் சாமிநாதன் (45), வேப்பூர் ஆனந்தன் (47), சிறுபாக்கம் பழனியப்பன் (55), திட்டக்குடி தமிழரசி (56), வேலு (40) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story