ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நெல் உள்ளிட்ட தானியங்களின் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. நேற்றைய நிலவரப்படி 1,600 மூட்டை நெல் வரத்து காணப்பட்டது. ஒருமூட்டை நெல் அதிகபட்ச விலை ரூ.1,795 ஆகவும், குறைந்தபட்ச விலை ரூ.1,105 ஆகவும் இருந்தது. அதேபோல் எள் ஒரு மூட்டை ரூ.11 ஆயிரத்து 690 ஆகவும், உளுந்து ஒரு மூட்டை அதிகபட்ச விலை ரூ.7,149 ஆகவும், குறைந்தபட்ச விலை ரூ.6,869 ஆகவும் இருந்தது. நாட்டுக்கம்பு ஒரு மூட்டையின் அதிகபட்ச விலை ரூ.7,169 ஆகவும், குறைந்தபட்ச விலை ரூ.6,830 ஆகவும் இருந்தது. இது தவிர பச்சைபயிர், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் தட்டைப்பயிர் உள்ளிட்ட தானியங்களும் குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.30 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை நடைபெற்றது.

இதற்கிடையே ஒழுங்குமுறை விற்பனை கூடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு பொங்கல் விடுமுறை 17-ந் தேதியுடன் முடிந்து விட்டதை அடுத்து நேற்று தானியங்கள் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை) நாளையும்(வெள்ளிக்கிழமை) ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story