72 தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை


72 தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை
x
தினத்தந்தி 10 Aug 2023 1:45 AM IST (Updated: 10 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 72 தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையொட்டி பொதுமக்கள் தேசியக்கொடியை எளிதாக வாங்கி கொள்வதற்கு வசதியாக தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை ஆகிய 3 தலைமை தபால் அலுவலகங்கள், 69 துணை தபால் அலுவலகங்கள் என மொத்தம் 72 தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ரூ.25 -க்கு தேசியக்கொடியை பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே www.epostoffice.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து தபால்காரர் மூலம் தேசியக்கொடியை பெற்றுக் கொள்ளலாம் என்று தபால் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 More update

Next Story