ரூ.33½ லட்சம் மதிப்பிலான மிளகு விற்பனை


ரூ.33½ லட்சம் மதிப்பிலான மிளகு விற்பனை
x

கொல்லிமலை கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.33½ லட்சம் மதிப்பிலான மிளகு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்

கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்கத்தின் மூலம் மலைவாழ் மக்களின் வேளாண் உற்பத்தி பொருட்களான மிளகு, காபி ஆகியவற்றை நல்ல விலைக்கு கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி சென்னை கூட்டுக் கொள்முதல் குழு மற்றும் தமிழ்நாடு மூலிகை பொருள் தயாரிப்பு நிறுவனம் மூலம் இதுவரை 12 டன் மிளகு ரூ.54 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களிடம் இருந்து நேரடியாக மிளகை கொள்முதல் செய்து கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ரூ.5.60 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் மிளகை கூட்டுறவு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும், ரூ.16.80 லட்சம் மதிப்புள்ள 3 டன் மிளகை தமிழ்நாடு மூலிகை பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கும், ரூ.11.20 லட்சம் மதிப்புள்ள 2 டன் மிளகை கூட்டு கொள்முதல் குழுவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே மாதத்தில் மொத்தம் ரூ.33.60 லட்சம் மதிப்புள்ள 6 டன் மிளகு லோடை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

இதனிடையே ரூ.5.60 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் மிளகு இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து உற்பத்தி நிலைய கூட்டுறவு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) செல்வகுமரன், சரக துணை பதிவாளர் கர்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story