பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கம்பத்தில் 5 கடைகளுக்கு அபராதம்
கம்பத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு கடந்த 1-ந்ேததி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க ஓட்டல், கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கம்பத்தில், நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் தலைமையில் சுகாதார அலுவலர் சுந்தரராஜன், சுகாதார ஆய்வாளர்கள் நேற்று அரசு மருத்துவமனை, காந்தி சிலை, வேலப்பர் கோவில் தெருவில் உள்ள ஓட்டல், டீக்கடை, மளிகை கடை, ஜவுளிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் கவர்கள், தெர்மோ கோல் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் 5 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அப்போது பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.