புகையிலை பொருட்களின் விற்பனை; மளிகை கடைக்கு சீல்


புகையிலை பொருட்களின் விற்பனை; மளிகை கடைக்கு சீல்
x

சிறுபாக்கம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற மளிகைக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கடலூர்

சிறுபாக்கம்,

சிறுபாக்கம் அடுத்த மா.புதூர் ஊராட்சியில் உள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிக்கு புகார் சென்றது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சிறுபாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் மா.புதூர் ஊராட்சியில் உள்ள பெரியசாமி(வயது 57) என்பவரது கடையில் சோதனை நடத்தினர். அதில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் பெரியசாமி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story