சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை


சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை
x

சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.

அரியலூர்

உடையார்பாளையம்:

உடையார்பாளையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த வாரச்சந்தையில் காலையில் ஆட்டுச்சந்தையும், பின்னர் காய்கறிகள் சந்தையும் நடைபெறும். இந்நிலையில் பொங்கல் பண்டிகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நாளை(திங்கட்கிழமை) மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று மாலை மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணங்கிவிட்டு, பின்னர் ஆட்டுக்கறி சமைத்து வாழையிலையில் வைத்து குலதெய்வத்தை வழிபட்டு, பின்னர் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிடுவார்கள்.

இதனால் மாட்டு பொங்கல் அன்று ஒவ்வொரு கிராமத்திலும் ஏராளமான ஆடுகளை அறுத்து, அதன் இறைச்சியை வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். இதையொட்டி நேற்று உடையார்பாளையம் ஆட்டு வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. இதில் 50 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாரச்சந்தையில் ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்றது. இதனால் விவசாயிகள் சந்தோஷமாக ஆடுகளை நல்ல விலைக்கு விற்று பணத்தை பெற்று சென்றனர்.


Next Story