சேலம்- சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்


சேலம்- சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 10 July 2023 7:30 PM GMT (Updated: 11 July 2023 10:31 AM GMT)

சேலம்- சென்னை விமான சேவையைமீண்டும் தொடங்க வேண்டும்

சேலம்

நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள சேலம்- சென்னை விமான சேவையை விரைவில் மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஆலோசனைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை குழு கூட்டம்

சேலம் விமான நிலைய ஆலோசனை குழுவின் 5-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆலோசனைக்குழு தலைவர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமை தாங்கினார். சேலம் விமான நிலைய இயக்குனர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள சேலம், சென்னை விமான சேவையை மீஷ்டும் விரைவில் தொடங்க விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பனிமூட்டம் காலங்களில் விமானம் இறங்குவதற்கு வசதியாக டி.வி.ஓ.ஆர். என்கிற நவீன கருவியை நிறுவ வேண்டும் என்று கடந்த 4 கூட்டத்தில் தீமானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கை இல்லை. எனவே விரைவில் சேலம் விமான நிலையத்தில் டி.வி.ஓ.ஆர். கருவி பொருத்த வேண்டும்.

சேலம்- சென்னை விமான சேவையைமீண்டும் தொடங்க வேண்டும்

விமான போக்குவரத்தை விரிவுபடுத்தும் வகையில் சேலத்தில் இருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்க வேண்டும். சேலத்தில் இருந்து கொச்சிக்கும், சேலத்தில் இருந்து சென்னை வழியாக சீரடிக்கும் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து பார்த்திபன் எம்.பி. கூறும் போது, புதுவையை சேர்ந்த தனியார் விமான நிறுவனம், சேலத்தில் இருந்து விமான சேவையை இயக்க விருப்பம் தெரிவித்து உள்ளன. இதுகுறித்து விரைவில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சேலத்தில் இருந்து அதிக அளவு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு அவரவர் தாமாக முன் வந்து நிலம் கொடுப்பவர்களுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூடுதல் நிதி உதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் ஆலோசனை குழு உறுப்பினர்களான மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன், தொழில் அதிபர்கள் அழகரசன், ஹரிபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story