இன்று முதல் 18 நாட்களுக்கு சேலம்-கோவை பயணிகள் ரெயில் ரத்து
இன்று முதல் 18 நாட்களுக்கு சேலம்-கோவை பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சேலம்
சூரமங்கலம்,
கோவை-திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நாள்தோறும் இயக்கப்பட்டு வரும் சேலம்-கோவை பயணிகள் ரெயில் (வண்டி எண்-06802) மற்றும் கோவை-சேலம் பயணிகள் ரெயில் (வண்டி எண்-06803) ஆகிய ரெயில்கள் இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதாவது பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 18 நாட்களுக்கு இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story