சேலம் பெரியார் பல்கலைக்கழக விவகாரம்: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதன் பதிவாளர் தடை விதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையை பறிக்கும் செயலாகும்.
தமிழக அரசின் சுற்றறிக்கைப்படி தான் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியிருக்கிறார். இந்தத் தடைக்கு யார் காரணமாக இருந்தாலும் அது தவறு தான். தடை விதிக்க தூண்டியதா? என்பது தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
அரசியலும் ஓர் அறிவு தான். அரசியல் செயல்பாடுகளால் பல்கலைக்கழகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது; மாறாக பண்படும். எனவே, பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் அரசியல் செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.