சேலம் பொன்னம்மாபேட்டையில் மூதாட்டி வீட்டில் 12½ பவுன் நகை திருட்டு


சேலம் பொன்னம்மாபேட்டையில் மூதாட்டி வீட்டில் 12½ பவுன் நகை திருட்டு
x

சேலம் பொன்னம்மாபேட்டையில் மூதாட்டி வீட்டில் 12½ பவுன் நகை திருட்டு போனது.

சேலம்

நகை திருட்டு

சேலம் பொன்னம்மாபேட்டை வாசக சாலை தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 71). அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சேலத்தில் உள்ள வீட்டில் சரஸ்வதி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தார்.

அப்போது பிரோவில் இருந்த 12½ பவுன் நகை காணாததை கண்டு அதிர்ச்சி அவர் அடைந்தார். இதையடுத்து இந்த நகையை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றிருக்கலாம்? என்று கருதினார். இதுகுறித்து சரஸ்வதி நேற்று அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதில் சரஸ்வதி வீட்டில் உள்ள பிரோவை பூட்டி வைக்கவில்லை என்றும், அவர் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டை பூட்டாமல் சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டுக்குள் புகுந்து நகையை திருடியிருக்கலாம் என்று கருதுகின்றனர். இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story