பால், தயிர், மோர் விற்பனையை அதிகரிக்க வேண்டும்


பால், தயிர், மோர் விற்பனையை அதிகரிக்க வேண்டும்
x

பால், தயிர், மோர் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என ஆவின் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆவின் பொதுமேலாளர் ரவிக்குமார், துணை பதிவாளர் (பால்வளம்) விஸ்வேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசுகையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை புதிதாக உருவாக்க வேண்டும். செயலிழந்த சங்கங்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும். பால் கொள்முதலை அதிகரித்து, பால் மற்றும் பால் உபபொருட்களான தயிர், மோர், ஐஸ்கிரீம், பால்கோவா உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் திட்டங்களை கூடிய விரைவில் முடிக்கவும், ஒன்றியத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் ஆவின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story