தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நலவாரியம் அமைத்து அரசு ஆணையிட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடி

உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நேற்று உப்பள தொழிலாளர் நல வாரியத்தை அமைத்து அரசாணை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில இணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உப்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்தனர். மேலும் இனிப்புகளும் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தனி நல வாரியம் அமைத்துத் தந்த தமிழக அரசு மற்றும் தமிழக முதல்-அமைச்சருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.


Next Story