சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக உண்டியல்கள் திறப்பு


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக உண்டியல்கள் திறப்பு
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக உண்டியல்கள் திறக்கப்பட்டது.

திருச்சி

சமயபுரம்:

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, கோவில் நிர்வாகம் சார்பாக மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். ஆனால், இந்த மாதம் 3-வது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில், காணிக்கையாக ரூ.91 லட்சத்து 39 ஆயிரத்து, 809 ரொக்கமும், 1 கிலோ 220 கிராம் தங்கமும், 2 கிலோ 790 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.


Next Story