சீர்காழி பகுதியில் கேள்விக்குறியாகும் சம்பா சாகுபடி


சீர்காழி பகுதியில் கேள்விக்குறியாகும் சம்பா சாகுபடி
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வராததால் சீர்காழி பகுதியில் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வராததால் சீர்காழி பகுதியில் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கேள்விக்குறியாகும் சம்பா சாகுபடி

தமிழக அரசு ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் காவிரி நீர் திறப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் குறுவை சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை நம்பி காவிரி கடைமடை பகுதிகளான சீர்காழி, கொள்ளிடம், மாதானம், புத்தூர், கொண்டல், வள்ளுவக்குடி, அகனி, ஆதமங்கலம், பெருமங்கலம், கதிராமங்கலம், வைத்தீஸ்வரன் கோவில், எடக்குடி வடபாதி, திட்டை, திருவெண்காடு, மங்கைமடம், நாங்கூர், தாண்டவன்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்காக தங்களுடைய நிலங்களை உழவு செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர்.

குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் சிலர் நீர் வராததால் அதை கைவிட்டனர். மின் மோட்டார் உள்ளவர்கள் மட்டுமே குறுவை சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 72 நாட்கள் ஆகியும் மேற்கண்ட கிராமங்களுக்கு இதுவரை காவிரி நீர் வரவில்லை. இதனால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்வதும் கேள்விக்குறியாக உள்ளது. சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் நீண்ட ரக நெற்பயிர்களான சாகுபடி செய்ய வேண்டுமானால் ஆடி மாதமே நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அப்போது தான் மழை காலத்திற்குள் அறுவடை செய்ய முடியும். இதனால் வரை காவிரி நீர் வராததால் சம்பா சாகுபடி செய்ய முடியுமா அல்லது இந்த ஆண்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா என கவலையில் உள்ளனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த விவசாய சங்க தலைவர் செந்தில் முருகன் கூறுகையில், தமிழக அரசு மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு 70 நாட்களுக்கு மேலாகியும் இதனால் வரை கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வந்து சேரவில்லை.

இதனால் சம்பா சாகுபடி என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் காவிரி நீர் வராததால் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக பாசன நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாற வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.


Next Story