ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓபிஎஸ் குடும்பத்தோடு சாமி தரிசனம்
குடும்பத்தினருடன் கோவிலுக்கு வருகை தந்த ஓபிஎஸ்-க்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். ஓ. பன்னீர் செல்வம் தனது மனைவி இறந்து ஒரு வருடம் ஆனதை தொடர்ந்து குலதெய்வ வழிபாட்டிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார்.
இதற்கிடையே தனது தம்பி ராஜா, மகன் பிரதீப், மருமகள் மற்றும் குடும்பத்தினருடன் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த ஓபிஎஸ்-க்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செண்பகத்தோப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள குலதெய்வம் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story