பூதவாகனத்தில் சாமி வீதி உலா
பூதவாகனத்தில் சாமி வீதி உலா
குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் உற்சவ விழா நடைபெற்றது. விழாவில் சாமி, அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து திருமால் எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சியும், வீழிநாதருக்கு தாமரைப்பூ அர்ச்சனையும் நடைபெற்றது. விஸ்வகர்ம சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் பிச்சுமணி, மகாலிங்கம் ஆகியோர் சாமி, அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பித்தனர். இரவு 10 மணி அளவில் பூத வாகனத்தில் வீழிநாதசாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கணக்காளர் சுப்ரமணியன் ஆகியோர் செய்து இருந்தனர்.