அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி சாமி வீதியுலா


அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி சாமி வீதியுலா
x

அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி சாமி வீதியுலா நடைபெற்றது.

திருச்சி

கல்லக்குடி:

புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாடி மேட்டூரில் உள்ள பூரணி புஷ்பகலாம்பாள் சமேத வேதாண்ட வேதியன் வினை தீர்த்த அய்யனார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில்களில் திருவிழாவையொட்டி ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமியன்று தோரோட்டம் நடைபெறும். இதையொட்டி கடந்த மாதம் 20-ந் தேதி விநாயகர் பூஜையுடன், கொள்ளிடம் ஆற்றில் இருந்து கரகம் பாலித்து, பால்குடம் எடுத்து வந்து கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் தினமும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தினமும் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருள வீதியுலா நடந்தது. இன்று(வியாழக்கிழமை) குதிரை வாகனத்தில் வேட்டைக்காரனாக சுவாமி எழுந்தருளுகிறார். நாளை(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி அளவில் திருக்கல்யாணமும், பின்னர் அன்னதானமும் நடைபெறுகிறது. மதியம் 3 மணி அளவில் ராஜ அலங்காரத்தில் சாமி சிலை தாங்கிய தேரோட்டம் நடைபெறுகிறது. தேர்நிலை வந்தபின் இரவு 8 மணியளவில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை ஆடு, கோழி பலியிடப்பட்டு, பூஜைகளும், மதியம் அன்னதானமும் நடக்கிறது. 7-ந் தேதி காலை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.


Next Story