மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூர் நீர்வள ஆதாரத்துறை அலுவலகம் முன்பு நேற்று கரூர் மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஜெயபால் சிறப்புரை ஆற்றினார். இதில் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மணல் குவாரிகள் அனைத்தையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்துவதை தடுத்திட வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ளும் உரிமத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story