ஆதார் எண்-வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் விழிப்புணர்வு; நாகை கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பம்


ஆதார் எண்-வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் விழிப்புணர்வு; நாகை கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பம்
x

நாகை:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் மேம்படுத்திடும் வகையில் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கு ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அலுவலக வேலை நாட்களில் நேரில் கொண்டு வந்து தாலுகா அலுவலக தேர்தல் பிரிவு, இ-சேவை மையம் மூலமாகவும், Voters Help Line என்ற செயலி அல்லது https://www.nvsp.in என்ற இணையதள முகவரி மூலமாகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம்-6பி ஐ பூர்த்தி செய்து கொடுத்தும் வாக்காளர்கள் தங்களின் ஆதார் விவரங்களை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 100 சதவீதம் இணைப்பை மேம்படுத்திடும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை நாகூர் தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முத்துக்குமார் நாகை புதிய கடற்கரையில் செய்திருந்தார்.


Next Story