திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 2 பேருக்கு வலைவீச்சு


திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 2 பேருக்கு வலைவீச்சு
x

திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் திருவள்ளூரை அடுத்த விடையூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லாரியில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசாரை கண்டதும் அந்த வண்டியில் இருந்த 2 பேர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதை தொடர்ந்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு மேலாளராக சல்மான் உசேன் (வயது 24) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அந்த தனியார் தொழிற்சாலையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள இரும்பு தளவாட பொருட்களை 2 பேர் திருடி சென்றுள்ளனர். இது குறித்து அவர் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story