மணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்

மணல் திருட்டு சம்பவத்தில் 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் திருடப்படுவதாக திருநாவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது, அங்கு 4 மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து , தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





