மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் வேளாண் பல்கலைக்கழகம் பின்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக குயவன்குடி கிராம நிர்வாக அதிகாரி தர்மராஜுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அவர் அங்கு சென்று பார்த்தபோது மினிலாரியில் மணல் அள்ளியவர்கள் அதனை கொண்டு செல்லும்போது வாகனம் பழுதாகி நின்றுள்ளது. அதனை சரிசெய்து கொண்டு செல்ல டிராக்டர் என்ஜினை வைத்து இழுத்து கொண்டு இருந்தனர். அப்போது கிராம நிர்வாக அதிகாரியை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் டிராக்டர், மினி லாரியை மணலுடன் பறிமுதல் செய்தனர். மணல் அள்ளியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story