திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம்


திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம்
x
தினத்தந்தி 5 Dec 2022 7:00 PM GMT (Updated: 5 Dec 2022 7:01 PM GMT)

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது.

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் நவக்கிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார கோவிலாகவும் விளங்குகிறது.

நேற்று கார்த்திகை 3-வது சோமவாரத்தையொட்டி, நேற்று மாலை 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்பு நெல் மணிகள் மீது 1,008 சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டது. இதனை அடுத்து சங்குகளில் நறுமண பொருட்கள் சேர்க்கப்பட்ட புனித நீர் நிரப்பப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.

சங்காபிஷேகம்

தொடர்ந்து சிறப்பு ஹோமம் நடந்தது. பின்னர் மேளம் தாளம் முழங்கிட சிவாச்சாரியார்கள் வலம்புரி மற்றும் இடம்புரி சங்கை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்கிட சாமிக்கு சங்காபிஷேகம் நடந்தது.

பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் 63 நாயன்மார்கள் வழிபாட்டு மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி சிவாச்சாரியார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கூட்டுறவு சங்க இயக்குனர் நாடி குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது.


Next Story