விநாயகர் கோவில்களில் சங்கடஹரசதுர்த்தி வழிபாடு


விநாயகர் கோவில்களில் சங்கடஹரசதுர்த்தி வழிபாடு
x
தினத்தந்தி 8 May 2023 6:45 PM GMT (Updated: 8 May 2023 6:46 PM GMT)

சங்கராபுரம் பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடஹரசதுர்த்தி வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தியை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி சாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சங்கராபுரம் செல்வவிநாயகர், பொய்க்குணம் சாலையிலுள்ள நவசக்தி விநாயகர் மற்றும் சங்கராபுரம் பகுதியில் உள்ள பல்வேறு விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story