ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு


ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x

ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் தூய்மை திட்டத்தின் கீழ் தூய்மை செய்யப்பட்டு வருகிறது. குப்பைகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் நீர்நிலைகளில் கொட்டக் கூடாது என பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது சோளிங்கர் ஏரி நிரம்பி உள்ளது. இந்த தண்ணீரில் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து குப்பைகள், கழிவுகளை ஏரியில் கொட்டி விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தண்ணீரில் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

மேலும் அப்பகுதியில் ஓட்டல்கள், கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியின் கடைவாசல் மற்றும் ஓடையில் கலக்குமாறு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படுகின்றனர். ஏரி தண்ணீரில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story