தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஊதியம் வழங்காததால் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர்
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 25 மற்றும் 81-வது வார்டு, வடக்கு மண்டலம் 3-வது வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த மாதம் தொடங்கி 18 நாட்கள் ஆகியும் இதுவரை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் அனைவரும் நேற்று பணிக்கு செல்லாமல் அந்தந்த மண்டல அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஒவ்வொரு மாதமும் எங்களுக்கான ஊதியம் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இதனால் பணத்தேவை அதிகரித்து சிரமம் அடைகிறோம். எங்களுக்கு முறையான ஊதியத்தை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story