அரக்கோணத்தில் நகரமன்ற தலைவர் வீட்டை தூய்மை பணியாளர்கள் முற்றுகை


அரக்கோணத்தில் நகரமன்ற தலைவர் வீட்டை தூய்மை பணியாளர்கள் முற்றுகை
x

அரக்கோணத்தில் நகரமன்ற தலைவர் வீட்டை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணத்தில் நகரமன்ற தலைவர் வீட்டை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

அரக்கோணம் நகராட்சியில் 110 நிரந்தர தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் கடந்த 10 ஆண்டுகளாக சிலரை மட்டும் தூய்மை பணிக்கு ஈடு படுத்தாமல் அலுவலக பணிக்கு ஈடுபடுத்தி வருவதாக குற்றம் சாட்டி அனைவருக்கும் பாரபட்சமின்றி தூய்மை பணி கொடுக்க வேண்டும் என கூறி ஏ.பி.எம்.சீனிவாசன் தலைமையிலான தூய்மை பணியாளர்கள் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய போது நாங்கள் யாரிடமும் பாரபட்சம் காட்ட வில்லை என்றும், இருப்பினும் இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story