மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா


மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா
x
சேலம்

சேலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், தூய்மை பணியாளர்களை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களில் சிலர் ஆணையாளர் பாலசந்தரை சந்தித்து பேசினர். அப்போது அவரிடம் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர்.

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறும் போது, தங்களின் விருப்பத்தை கேட்காமல் அதிகாரிகள் எங்களை இடமாற்றம் செய்துள்ளனர். அம்மாபேட்டை மண்டலத்தில் பணியாற்றி வருபவர்களை செட்டிச்சாவடி, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடமாற்றும் செய்துள்ளனர். பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இடமாற்றம் செய்துள்ளதால் எங்களால் குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியவில்லை. எனவே இந்த இடமாற்றத்தை ரத்து செய்துவிட்டு பணிமாறுதல் அளித்த ஆணையையும் ரத்து செய்ய வேண்டும். நாங்கள் கைப்பட எழுதி கொடுத்ததை வைத்து விருப்பத்திற்கு ஏற்ற இடமாறுதல் அளிக்க வேண்டும் என்றனர்.


Next Story