தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2023 1:41 AM IST (Updated: 31 Jan 2023 1:52 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (ஒ.எச்.டி.) ஆபரேட்டர், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி மற்றும் பள்ளியில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாத ஊதியத்தை பிரதி மாதம் 5-ந்தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். தூய்மை காவலர்களை பணி நிரந்தப்படுத்தி, உரிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். துப்புரவு பணிகளை அவுட் சோர்சிங் முறையில் விடும் முயற்சியை கைவிட வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாதம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும். பல ஆண்டுகளாக பணிபுரியும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை சுழற்சி முறையில் பாரபட்சமாக நிறுத்துவதை கைவிட்டு, அவர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


Next Story