தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்


தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
x

நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் 46 சுய உதவிக்குழு மூலமாக 753 தூய்மை பணியாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் விடுவது என்று மாநகராட்சி அறிவித்தது. இதையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்தநிலையில் நேற்று தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தந்த மண்டல, அலகு அலுவலகங்களுக்கு வந்திருந்த தூய்மை பணியாளர்கள் வேலை செய்யாமல் திரும்பி சென்றனர். மேலும் மேலப்பாளையம் மண்டல அலுவலகம் முன்பு திரண்டிருந்த தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகி மோகன் கூறுகையில், தனியார் நிறுவனத்திடம் சுய உதவிக்குழு தொழிலாளர்களை ஒப்படைக்கும் போக்கை கைவிடக்கோரியும், சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து மாநகராட்சியில் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வேலை நிறுத்தம் செய்துள்ளோம். நாளை (திங்கட்கிழமை) முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்து மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் செய்ய உள்ளோம்'' என்றார்.


Next Story