தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்


தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
x

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புதிய கட்டுப்பாடுகள்

நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். 4 மண்டலங்களில் 175 நிரந்தர பணியாளர்கள், 238 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் 750 சுய உதவி குழு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை வார்டு விட்டு, வார்டுக்கு இடமாற்றம் செய்திருப்பதுடன் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 மண்டலங்களிலும் சுகாதார பணி பாதிக்கப்பட்டது.

முற்றுகை

மேலும் அவர்கள் நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதுகுறித்து தொழிற்சங்க செயலாளர் மோகன் கூறுகையில், இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்து நாளையும் (அதாவது இன்று), நாளை மறுநாளும் தொடரும். நாளை (திங்கட்கிழமை) காலையில் ஆணையாளர் பேசுவதாக கூறியுள்ளார். அதில் தீர்வு ஏற்படா விட்டால் வேலைநிறுத்தம் தொடரும். மீண்டும் தொழிலாளர்கள் அனைவரும் திங்கட்கிழமை காலையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்'' என்றார்.


Next Story