சி.பி.எஸ்.இ தேர்வில் சங்கரன்கோவில் பள்ளி மாணவர்கள் சாதனை
சி.பி.எஸ்.இ தேர்வில் சங்கரன்கோவில் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
வாசுதேவநல்லூர்:
2022-2023-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தென்காசி மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று சங்கரன்கோவில் ஏ.வெங்கடேஷ் குமார் நினைவு அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும் ஏ.வி.கே. பள்ளி சாதனை படைத்து 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர் விஷால் 480 மதிப்பெண் பெற்று முதலிடமும், கள்ளவேந்தன் முகேஷ் 476 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், ஸ்வர்ணா 457 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளார்கள்.
மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் ஏ.வி.கே. பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது 10-ம் வகுப்பு மாணவி ஹனுஷா 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடமும், மாணவி பிரதிக்ஷா, வேதிகா பார்கவி 469 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவி பிரியதர்ஷினி 464 மதிப்பெண்கள் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை ஏ.வி.கே. பள்ளி கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.