பாம்பு பிடிபட்டது
வெள்ளகோவில் சக்தி நகரைச் சார்ந்த ஒருவரது வீட்டில் பாம்பு இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு துறை குழுவினர் அங்கு விரைந்தனர். பின்னர் அங்கு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்தபகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டில் சுமார் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது. இதை அக்கம்பக்கத்தினர் வந்து ஆர்வத்துடன் பார்த்தனர். சிலர் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.
பின்னர் அந்த பாம்பை மீட்டு பாதுகாப்பான வனப்பகுதியில் தீயணைப்பு துறையினர் விட்டனர். துரிதமாக செயல்பட்டு பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். ஏற்கனவே இந்த விஜயகுமார் வீட்டில் இதற்கு முன்பாக 3 முறை பாம்பு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதி பீதியில் ஆழ்த்தியுள்ளது.