சன்மார்க்க சங்க பொதுக்குழு கூட்டம்
சன்மார்க்க சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சிறுவாச்சூர் சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட சன்மார்க்க சங்க தலைவர் வக்கீல் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சென்னையில் வருகிற 5-ந் தேதி நடைபெறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள அருட்பிரகாச வள்ளலார் 200 விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சன்மார்க்க சங்கத்தினர் திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சிவநடராஜன் வரவேற்றார். பொதுச்செயலாளர் நாராயணசாமி ஆண்டறிக்கையும், வரவு, செலவு அறிக்கையும் சமர்ப்பித்தார். முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story