மரக்கன்றுகள் நடும் விழா


மரக்கன்றுகள் நடும் விழா
x

மரக்கன்றுகள் நடும் விழா

விருதுநகர்

காரியாபட்டி

காரியாபட்டி பேரூராட்சியில் தூய்மை நகரங்களின் மக்கள் இயக்கம் சார்பாக மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி தூய்மை நகரங்களின் மக்கள் இயக்கத்தின் சார்பாக நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எனது குப்பை, எனது பொறுப்பு என்ற விதிமுறையை கடைபிடிப்போம் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. சாலை ஓரங்கள், நீர் நிலைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சரஸ்வதி, சங்கரேஸ்வரன், தீபா, நாகஜோதி முத்துக்குமார், எஸ்.பி.எம்.டிரஸ்டு அழகர்சாமி, இன்பம் பவுண்டேசன் விஜயகுமார், பசுமை பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், மனித பாதுகாப்பு கழக மாவட்ட செயலாளர் பிரின்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story