மரக்கன்றுகள் நடும் விழா


மரக்கன்றுகள் நடும் விழா
x

பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையை அடுத்த பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, எல்.அன்.டி., நெல்லை வனத்துறை சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கல்லூரி ஆட்சி மன்றகுழு உறுப்பினர் தளவாய் இரா.திருமலையப்பன் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் வாகை, நாவல், வேம்பு, புங்கை, வாதமடக்கி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.

உதவி வன பாதுகாவலர் இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரங்களை வளர்ப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது, பல்லுயிர் பெருக்கம் குறித்து விளக்கி கூறினார். கல்லூரி துணை முதல்வர் சேகர் வாழ்த்தி பேசினார். எல்.அன்.டி. திட்ட மேலாளர் வெங்கடேஷ், வனச்சரக அலுவலர்கள் சிவசங்கரன், செல்வகுமார், சுற்றுச்சூழல் கழக ஒருக்கிணைப்பாளர் சுப்பிரமணியன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் இலக்குவன், சிலம்பரசன், பரமசிவன், கார்த்திகேயன், செல்வம், ஜாய் சிந்தியா, பிச்சம்மாள், கல்லூரி புறவழித்திட்ட அலுவலர் கங்கா மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story