மரக்கன்றுகள் நடும் விழா


மரக்கன்றுகள் நடும் விழா
x

பெரம்பூரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

ஆண்டுதோறும் ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று குத்தாலம் அருகே பெரம்பூர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதை தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவில் துணை சூப்பிரண்டு வசந்தராஜ், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் சதீஷ், பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவதாஸ்மற்றும் பெரம்பூர் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story