மரக்கன்றுகள் நடும் விழா
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் நீதிபதிகள் பங்கேற்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி ராமலிங்கம் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைநிலா மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் முத்து இசக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மரக்கன்றுகள் நட்டனர். இதில் அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் குருசாமி, செயலாளர் பாலச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story