பேசும் கன்னிமார் கோவிலில் சர்வ அமாவாசை பூஜை
பேசும் கன்னிமார் கோவிலில் சர்வ அமாவாசை பூஜை நடைபெற்றது.
அலங்காநல்லூர்
மதுரை காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் ஆவணிமாத சர்வ அமாவாசை பூஜைகள் அங்குள்ள சித்தி விநாயகர், மந்தை கருப்பசாமி, மற்றும் பேசும் கன்னிமார் கோவிலில் நடந்தது. இதில் உலக நன்மை வேண்டியும், மக்கள் நலமுடன் வாழவும், விவசாயம் செழிக்க, முல்லை பெரியாறு, வைகை அணைகளில் நீர் மட்டம் உயர வேண்டியும் சிறப்பு பூஜைகள், கூட்டு பிரார்த்தனைகள் நடந்தது. இதையொட்டி, பேசும் கன்னிமார் 7 அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது.
இதில் சம்மங்கி, ரோஜா, மல்லிகை, அரளி, முல்லை, மஞ்சள் செவ்வந்தி, நாணல் புல் உள்ளிட்ட பல வண்ண பூமாலைகள், பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனைகளும் நடந்தது. தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்குள்ள கோவில் மண்டப வளாகத்தில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளையும் பாறைபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.